பேஸ்மேக்கர் பொருத்தியபடி எவரெஸ்ட்சிகரத்தில் ஏற முயன்ற இந்திய பெண்மணி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
59 வயதான சுஸான், பேஸ்மேக்கருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஆசிய பெண்மணி என்ற சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நல்ல உடற்தகுதி உடையவர்கள் 800 மீட்டர் உயரத்தை ஏற 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், சுஸானுக்கோ 5 முதல் 12 மணி நேரம் வரை தேவைப்பட்டுள்ளது.
மலையேற்றத்திற்கான உடற்தகுதி சோதனையில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், 29,000 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் நோக்கில் விடாப்படியாக இருந்தார்.
19,000 அடி உயரத்தை அடைந்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு உடல்நிலை மேலும் மோசமடைந்து சுஸான் உயிரிழந்தார். இந்தாண்டு எவரஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.