தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மேற்குவங்கத்தில் திரையிட அம்மாநில அரசு தடை விதித்ததற்கு எதிரான வழக்கில், தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? என்றும், அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும் என்றும், மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனிடையே, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடைசெய்யப்படவில்லை என அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தியது.