ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அங்கிருந்த வெடி பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
பயங்கரவாத தடுப்பு சிறப்பு நடவடிக்கை குழுவும், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையும் இணைந்து சலானி பகுதியில் தீவிரவாத தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டன. அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் வெடி பொருட்கள் இருந்ததை ராணுவத்தின் மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன.
வெடி பொருட்களை அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.