மியான்மரை தாக்கிய மோக்கா புயல் பாதிப்புகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மோக்கா புயல் நேற்று மாலை வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடந்த போது மணிக்கு 209 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
பெரும் மழையும், சூறாவளிக் காற்றும் மியான்மர் கடலோர பகுதிகளை புரட்டிப் போட்டன. செல்போன் டவர்கள் சேதமடைந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புகளில் வெள்ளம் சூழந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.