உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார் 300 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக ஜெர்மன் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து போர் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, AMX-10RC பீரங்கி உட்பட பல்லாயிரக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் இலகுரக டாங்கிகளை வழங்குவதோடு, அதனை இயக்க உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது.