தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளதாகவும், ஒரு தேர்தல் தோல்வி வைத்து எதையும் கூறிவிட முடியாது என்றும் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்.முருகன், மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணி ஆட்சிதான் நடப்பதாகவும், தமிழகத்திலும் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவதாகவும் அவர் கூறினார்.