சென்னையில் இனி எந்த வெள்ளம், புயல் வந்தாலும் மக்களுக்கு கவலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ஐ.சி.எப். மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய அவர், ரயில்வே கேட் மூடப்படும் போது ஒவ்வொரு முறையும் இங்கு 15 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மிசா காலகட்டத்தில் தன்மீது விழவேண்டிய அடியை தாங்கிக் கொண்டவர் சிட்டி பாபு என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதன் நன்றிக் கடனாகவே இந்தப் பாலத்திற்கு மேயர் சிட்டி பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.