உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களிலும் வெற்றி பெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில் கடந்த 4 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக 75 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 53 சதவீத வாக்குகள் பதிவானது. அ
வை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் சமாஜ்வாதி இரண்டாம் இடத்தையும் காங்கிரஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை காட்டிலும் தற்போது இரண்டு மடங்கு அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.