கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மூத்தத்தலைவர்களின் வாரிசுகள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளரை தோற்கடித்து முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிகண்ட் ரத்தோட்டை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.