அசாம், திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 33 ஆயிரம் இருமல் மருந்து பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பால் பொருட்களை ஏற்றிக்கொண்டு திரிபுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரைபரி காவல் கண்காணிப்புச் சாவடி அருகே வந்தபோது நடைபெற்ற சோதனையில் வாகனத்தில் இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.