ஜப்பானின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 4 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில் பூமிக்கு 40 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.