சீனாவின் உற்பத்தித் திறனை சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியை திட்டமிட முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க சங்கிலித் தொடர் போல விற்பனையாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமிதாப் கண்ட் எழுதிய மேட் இன் இந்தியா புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஜெய்சங்கர்,உற்பத்தித் திறன் இல்லாமல் எந்த ஒரு நாடும் வளர்ச்சியை அடையாது என்று கூறினார்.
கோவிட் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்பட்ட சவால்களை சுட்டிக் காட்டிய ஜெய்சங்கர், உள்நாட்டு உற்பத்திகள் தேங்கி, வெளிநாடுகள் தங்கள் செல்வத்தை அதிகரிக்கும் வாய்ப்பை வழங்கக் கூடாது என்று கூறினார்.