அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை மீது விண்கல் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன் தொடர்புடைய கல் ஒன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது.
Eta Aquariids விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். தற்போது வீட்டின் மேற்கூரையைத் துளைத்த அந்தக் கல், படுக்கை அறையில் விழுந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விண்கல் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விழுந்துள்ள இந்தக் கல், ஹாலியின் வால்நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது.