துனிசியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அங்கு வழிபாட்டில் பலர் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட காவலாளி ஒருவர், இரண்டு சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் சில உடல்கள் அங்கு கிடப்பதாக பதுங்கியிருந்தவர்கள் தங்கள் செல்போன்கள் மூலம் தகவல் அளித்தனர்.
ஆலயத்தில் வைத்து அனைவரையும் பூட்டி பிணைக்கைதிகளாகவும் பிடித்துக் கொண்ட அந்தக் காவலரிடமிருந்து சிக்கியவர்களை மீட்க போலீசார் 4 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தினர்.
அந்தக் காவலாளி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.