ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள நவீன் விலாஸ் இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க இரு தலைவர்களும் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பீகாரில் கடந்த ஆண்டு பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.