ஹிட்லரின் நாசிப் படைகள் முன்பு தோற்கடிக்கப்பட்டதை போலவே தற்போது ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் நேசப் படைகளிடம் ஜெர்மனி சரணடைந்ததை நினைவு கூரும் நிகழ்ச்சி, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய ஜெலென்ஸ்கி, 1945-இல் நாசிப்படைகளை அனைவரும் ஒன்றிணைந்து எப்படி வீழ்த்தினார்களோ, அதே போல தற்போது தீயசக்தியாக உள்ள ரஷ்யா முறியடிக்கப்படும் என்றார். மறுபுறம், ரஷ்யா அனுப்பிய 36 ஆளில்லா தாக்குதல் விமானங்களை தடுத்து அழித்திருப்பதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.