தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் அமைதியைப் பேணவும், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், தி கேரளா ஸ்டோரி படத்தை மேற்குவங்கத்தில் திரையிட அனுமதி மறுப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது மாநில அமைச்சர்களுடன் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.