கர்நாடகாவில், முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்க உணவக உரிமையாளர் ஒருவர் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் முறை வாக்களிப்பவர்கள் வாக்களித்தபின் கை விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்தால், இலவசமாக பட்டர் கல் தோசை, மைசூர் பாக், ஜூஸ் மற்றும் சினிமா டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என பெங்களூருவில் உள்ள தனியார் உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார்.
இதே அறிவிப்பை, கடந்த 2018, 2019 தேர்தல்களிலும் அந்த ஓட்டல் உரிமையாளர் செயல்படுத்தினார்