கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் குயின் காங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே சந்தித்துக் கொண்ட இரு அமைச்சர்களும் ஜி20 SCO மற்றும் BRICS அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக இந்தியா சீனா இடையே நீடிக்கும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றி சீன அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதே போன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவும் ஜெய்சங்கரும் சந்தித்து கைகுலுக்கிக் கொண்ட போதும், நேரடிப் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லை.