பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரத்தை திருப்பித் தருமாறு தென்னாப்பிரிக்கர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
530 காரட் எடை கொண்ட இந்த வைரம் 1905-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்நாட்டின் காலனித்துவ அரசால் பிரிட்டன் மன்னராட்சிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. செங்கோலில் உள்ள வைரமானது, பிரிட்டோரியாவுக்கு அருகில் வெட்டப்பட்ட 3,100 காரட் கல்லான, கல்லினன் வைரத்திலிருந்து வெட்டப்பட்டது.
அதே கல்லில் இருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய வைரம், கல்லினன் II என அழைக்கப்படுகிறது, இது பிரிட்டன் மன்னர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் அணியும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் உள்ளது.