ரஷ்ய அதிபர் புடினை கொல்ல கிரெம்ளின் மாளிகையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
செவ்வாய்க் கிழமை நள்ளிரவு கிரெம்ளின் மாளிகையை இலக்கு வைத்து பறந்த 2 ட்ரோன்களை, மின்சார ரேடார் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இது பயங்கரவாத தாக்குதல் முயற்சி எனவும், இதற்கு உக்ரைன் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், சம்பவம் நடந்த போது ரஷ்ய அதிபர் புடின் கிரெம்ளின் மாளிகையில் இல்லையெனவும் இதில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், கிரெம்ளின் மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கும் உக்ரைனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார்.