ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுஅமைச்சர்கள் மாநாடு கோவாவில் இன்று தொடங்குகிறது.
மாநாட்டின் இடையே மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா மற்றும் சீன அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மாநாட்டில் பங்கேற்பதற்காக எட்டு நாடுகளின் அமைச்சர்கள் இன்று இந்தியா வருகிறார்கள். அவர்களுக்கு இன்று இரவு ஜெய்சங்கர் விருந்தளித்து உபசரிக்க உள்ளார்.