கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்திற்கு இரு பதிவெண்களுடன் வந்த காரை போலீசார் பறிமுதல் செய் தனர்.
கோவிலுக்கு வந்த காரில் முன்பக்கம் பதிவு எண் வேறாகவும் பின்பக்கம் பதிவு எண் வேறாகவும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சர்ச்சைக்குரிய வகையில் இரு பதிவு எண்களுடன் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த நபர்களிடம் விசாரித்த போது அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து இரண்டு பதிவு எண்களின் முகவரிகள் குறித்தும் ஒரு காரில் எதற்காக இரண்டு பதிவு எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.