நாகர்கோவிலில் கடையை மூடிவிட்டதால் பழம் எடுத்து தர இயலாது என கூறிய பழ வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்த பழவியாபாரி பிரேம் ஆனந்த், ராமன்புதூர் சந்திப்பில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு 11.00 மணிக்கு அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் பழம் கேட்டதாக கூறப்படுகிறது.
கடையை மூடிவிட்டதால் பழம் எடுத்து தர இயலாது என பிரேம்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த நவீன், கையில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம்குமார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேம்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நேசமணி நகர் போலீசார், தலைமறைவாக உள்ள நவீனை தேடி வருகின்றனர்.