ஒடிசாவில் கல்வி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அங்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.
ஒடிசாவில் உள்ள கலிங்கா கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா முர்முவுடன் பங்கேற்றார். அப்போது பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் நடனமாடினர்.