இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கடன் செயலிகளை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் 14 லட்சத்து 30 ஆயிரம் கடன் செயலிகளை கூகுள் பிளேஸ்டோரில் வெளியிடவிடாமல் தாங்கள் தடுத்திருப்பதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரம் அக்கவுண்ட்களுக்கு தடை விதித்திருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் மோசடி கடன் செயலிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூகுள் கூறியுள்ளது.