அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யவதற்கான ராமர் சிலையை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தில் உருவாகி வரும் ராமர் கோயிலுக்கான சிலையை வடிவமைப்பதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 6 கிருஷ்ணா கற்கள் கொண்டு வரப்பட்டு, அதில் இரண்டு பாறைகள் ஏழரை அடி அளவுக்கு வெட்டப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டிலிருந்து, சிறந்த தரமான ஒரு கல் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கல் ராமர் சிலையை உருவாக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலையை கயிறு அறுத்தல் என்ற முறையில் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ள சிற்பிகள், அயோத்தி ராம் லல்லா கோயில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் எனவும், 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கோயிலில் ராமர் சிலை நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.