இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சிங்கப்பூருக்கு அருகிலுள்ள தஞ்சங் பினாங் தீவுக்கு 74 பேருடன் படகு சென்றுகொண்டிருந்ததாகவும், புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு படகு மரத்தில் மோதியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.