மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், போராளி குழுக்களின் அச்சுறுத்தலால், லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா. முகாம்களில் தங்கிவருகின்றனர்.
இடூரி மாகாணத்தில், விவசாயத்தில் ஈடுபட்டுவரும் லெண்டு சமூகத்தைச் சேர்ந்த போராளி குழு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் ஹெமா பழங்குடியினரை கொன்று குவித்து ஆடு, மாடுகளை சூறையாடிவருகிறது.
இதனால், ஹெமா பழங்குடி மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துவருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் ஐந்தரை லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.