கம்போடியாவில் அரியவகை டால்பின்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தை, இரண்டே மாதங்களில் அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
அங்குள்ள மெக்காங் ஆற்றில் கடந்த 1997ஆம் ஆண்டில் 200 அரியவகை இர்ராவடி டால்பின்கள் இருந்துள்ளன. சட்டவிரோத வேட்டை உட்பட பல்வேறு காரணிகளால் படிப்படியாகக் குறைந்து தற்போது 29 டால்பின்கள் மட்டுமே உள்ளன.
மீதமுள்ளவற்றை பாதுகாக்கும் பொருட்டு, டால்பின்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மீன் பிடிக்க தடை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டு அரசு புதிய சட்டம் கொண்டுவந்தது.
ஆனால் அதன் பிறகும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் டால்பின்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. அத்துடன் மீன் பிடி தடையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டத்தை ரத்து செய்வதாக கம்போடிய பிரதமர் ஹுன் சென் தெரிவித்துள்ளார்.