உலகளாவிய பிஷப் கூட்டத்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில், போப் ஆண்டவரின் ஆலோசனை அமைப்பான சினோட்களில் பெண்கள் தணிக்கையாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் அளித்துள்ள ஒப்புதல் மூலமாக வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலகளாவிய பிஷப் கூட்டத்தில் 5 அருட்சகோதரிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
பல ஆண்டுகளாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள பெண்கள் வாக்களிக்கும் உரிமை கோரி போராடி வந்த நிலையில், போப் பிரான்சிஸின் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.