ஈரான் நாட்டின் சக்திவாய்ந்த மதகுருவாக கருதப்பட்ட அப்பாஸ் அலி சுலைமானி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஈரான் அதிபரை நியமணம் செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் ஒருவரான அப்பாஸ் அலி சுலைமானி, அதிபர் அயதொல்லா கமேனியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார்.
இந்நிலையில், பபோல்ஸர் (Babolsar) நகரிலுள்ள வங்கிக்கு சுலைமானி சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பாதுகாவலரிடமிருந்த துப்பாக்கியை பறித்து சுலைமானியை சுட்டுக்கொன்றார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.