உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில், முன்னாள் ஜனாதிபதியும், சர்வாதிகாரியுமான உமர் அல் பசீர், சிறையிலிருந்து ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
1989ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் சூடானை ஆட்சி செய்த உமர், பொதுமக்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்தியதாக சர்வதேச நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் உள்ள சிறைச்சாலையில் உமர் அடைக்கப்பட்டார்.
தற்போது ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், 79 வயதான உமரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை ராணுவ மருத்துவமனைக்கு மாற்றியிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.