ரஷ்யாவின் யூரல்ஸ் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள சோஸ்வா கிராமத்தில் பரவியதில் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
சோஸ்வா மற்றும் தயோஸ்னி கிராமங்களில் பரவிய காட்டுத் தீயால் வீடுகள், மரங்கள் எரிந்து தீக்கிரையாகின. மரம் அறுக்கும் ஆலை, கான்கிரீட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.