பிரதமரின் மனதின்குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது எபிசோடு வரும் 30-ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.
மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்கான், முக்கியமான பிரச்சினைகள், மக்களின் தேவைகள், நாட்டின் வளர்ச்சிக்கான கருத்து பரிமாற்றம் உள்ளிட்டவை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதிபலிக்கப்படுவதாக கூறியுள்ளார். ரவீணா தான்டன் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.