தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலானதைப் பற்றி குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இப்படி ஒரு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை எண்ணிப் பார்க்க இயலுமா என்று கேள்வி எழுப்பியவர், இந்திய வங்கிகள் அத்தகைய பரிதாபகரமான நிலையில் இல்லை என்று கூறினார்.
இந்திய நிதி அமைப்புகள் பற்றி குறை சொல்பவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் அல்லது அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள் என்றும் நிதியமைச்சர் சாடினார்