கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 4 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் சூர்யா செல்வராஜ் என்பவரிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விட்டதாக சூரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குஜராத் போலீசார் சென்னைக்கு வந்து சூரியாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்கு கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள், ஸ்டாம்ப் பேப்பர்கள் கள்ள நோட்டு தயாரிப்புக்கான ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் 2 கோடிக்கு மேல் கள்ள ரூபாய் நோட்டுகளை சூர்யா பல்வேறு மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்துள்ளது.