தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பராமரிக்க வேண்டும் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருக்கும் கிஷன் ரெட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டவர்களும், பிற மதத்தைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பார்க்க வருவதாக தெரிவித்தார்.
கோயில்களை பராமரிப்பதன் மூலம்தான் அடுத்த தலைமுறைக்கும் கலாச்சாரத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும், மற்ற நாடுகளை விட கோயில் கட்டுமானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.