பிரான்ஸில், சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் காயமடைந்தனர்.
பெர்க் நகரில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று பட்டம் விட்டனர்.
அப்போது, அங்குள்ள சாலையில் வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி பட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது.
கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான 76 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.