மத்திய பிரதேச மாநிலத்தில் புறநகர் பயணிகள் ரயிலில் நேரிட்ட தீ விபத்தில் ஜெனரேட்டர் இருந்த ரயில் பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது.
ரத்லம் பகுதியில் இருந்து டாக்டர் அம்பேத்கர் நகர் வரை செல்லும் இந்த புறநகர் ரயில், பிரித்தம் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது திடீரென தீப்பற்றி கொண்டது.
மளமளவென பரவிய தீயால், ரயிலில் ஜெனரேட்டர் இருந்த பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது. பெரும் போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.