2ம் உலகப் போரின்போது, ஆயிரத்து 80 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.
1942ல் பப்புவா நியூ கினியாவிலிருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு ஆஸ்திரேலிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற மோன்டேவீடியோ மாரு என்ற ஜப்பானிய கப்பலை, பிலிப்பைன்ஸ் அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியது.
கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மமாகவே இருந்த இந்த விவகாரத்தில், கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6ம் தேதி துவங்கியது.
உயர்தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில், கடலில் மேல்மட்டத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் ஆழத்தில் ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.