கருக்கலைப்பு மாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கில் சட்டரீதியான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இறுதித் தீர்ப்பு வரும் வரை கருக்கலைப்பு மாத்திரையைப் பயன்படுத்தத் தடையில்லை என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.
மருந்துத் தயாரிப்பு நிறுவனமான டான்கோ லாபரேட்டரீஸ்-ன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவசரகால தேவைக்கு மாத்திரையைப் பயன்படுத்தும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
டெக்ஸாஸ் மாவட்ட நீதிபதி விதித்த தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கியது.ஆயினும் மகளிர் உடல் நலன் மீது குறி வைக்கும் அரசியல் உள்நோக்கத்தை சட்டரீதியாக தொடர்ந்து எதிர்ப்போம் என்று வெள்ளைமாளிகை விடுத்த அறிக்கையில் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.