மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஒடிசா மூதாட்டிக்கு அடுத்த மாதம் முதல் வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் நப்ராங்பூர் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக்கு பல கிலோ மீட்டர் உடைந்த சேரை பிடித்துக் கொண்டு நடந்தே சென்றார்.
விரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது கைரேகை சரிவர பதிவாகாததால் பணம் தரப்படவில்லை என புகார் எழுந்தது. இது பற்றி தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனிதநேயத்துடன் செயல்படுமாறு வங்கி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.இதற்கு விளக்கம் அளித்துள்ள வங்கி நிர்வாகம், கைரேகை சரிவர பதிவாகாத நிலையிலும் மூதாட்டியிடம் 3 ஆயிரம் ரூபாயை வங்கி மேலாளர் அப்போதே வழங்கியதாக குறிப்பிட்டுள்ளது.