ரமலான் பண்டிகையையொட்டி மனிதாபிமான அடிப்படையில், சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு துணை ராணுவப்படையினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதி முதல் ராணுவம் மற்றும் துணைராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், பொதுமக்கள் 350 பேர் மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி மனிதாபிமான அடிப்படையில் காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக துணை ராணுவப்படை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களை வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறப்பதற்கும், குடும்பத்தினரை சந்திக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பு வழங்கும் என ஆர்எஸ்எஃப் குறிப்பிட்டுள்ளது.