ஏமனில் ரமலான் நன்கொடை பெறுவதற்காக குவிந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 85 பேர் பலியான நிலையில் 322 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உள்நாட்டுப் போர்களால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் மக்களை வறுமை வாட்டி எடுத்து வருகிறது.
இதனால் அங்கு அவ்வப்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் ரம்ஜானை முன்னிட்டு தலைநகர் சனாவிலுள்ள பள்ளி வளாகம் ஒன்றில் 5 ஆயிரம் ரியால் மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், பள்ளியின் கேட் திறக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.