இன்று டெல்லியில் ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதில் நடைமுறை குறைபாடுகள் இருப்பதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
விதிகளைப் பின்பற்றாமல் சிறப்பு அமர்வு கூட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.