சென்னை பட்டினப்பாக்கம் டுமீங் குப்பம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால், புதிய குடியிருப்புப் பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு 4 மாடிகள் கொண்ட 6 குடியிருப்புகளில் 72 வீடுகள் அமைந்துள்ளன.
50 ஆண்டுகளுக்கு மேலாகும் இந்த குடியிருப்புகளின் சுவர்கள் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்தும் விரிசல் விட்டும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இந்த மக்களுக்காக நொச்சிக் குப்பம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், அவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் 2 மாதங்களுக்குள் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.