விவசாயிகளின் நலன் கருதி உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வதை போலந்து அரசு தடை செய்துள்ளது.
இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி விலை அதிகரிக்கவும் காரணமாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலந்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், ஆளும்கட்சிக்கு இது அரசியல் சிக்கலாக மாறியது.
உக்ரைனுக்கு நட்பு நாடாக இருந்தாலும், உள்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பது கடமை என ஆளும் கட்சியின் மூத்த தலைவர் காசிஸ்கி கூறினார்.