வட ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் மாளிகை, இராணுவத் தளபதியின் இல்லம் மற்றும் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் அறிவித்துள்ளது.
சூடானில், 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கார்டூமை துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையினர் முற்றுகையிட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு சூடானிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது