இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித யாத்திரைக்கான ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு வருகிற 17ந் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, இந்த யாத்திரை மொத்தம் 62நாட்கள் நடைபெறும் எனக் குறிப்பிட்டார்.
அமைதியான முறையில் புனித யாத்திரை நடைபெறுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.